இந்தியாவின் (India) விமான சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo) தற்போது ஏஐ பதிவு உதவியாளர் (AI registration assistant) சேவையை அறிமுகம் செய்துள்ளது.
6Eskai என்று அழைக்கப்படும் இந்த சேவையை கொண்டு பயனர்கள் வட்ஸ்அப் சாட் (WhatsApp chat) மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இந்த ஏஐ உதவியாளர் சேவையை ரைஃபி எனும் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
விமான டிக்கெட் முன்பதிவு
விமான டிக்கெட் முன்பதிவு செய்வது, போர்டிங் பாஸ் பெறுவது, விமானங்கள் வருகை குறித்த விவரங்களை அறிந்து கொள்வது மட்டுமின்றி பயணம் தொடர்பான உங்களது சந்தேகங்களுக்கு 6Eskai பதில் அளிக்கும் திறன் கொண்டுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் புதிய ஏ ஐ உதவியாளரைக் கொண்டு மிக எளிமையாக வட்ஸ்அப் சாட் செய்தே பயணம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும்.
மேலும், இந்த சேவை தற்போது ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தி என பிராந்திய மொழிகளிலும் பயன்படுத்தும் வசதி கொண்டிருக்கிறது.
அதி நவீன பொறியியல் தீர்வு
புதிய சேவையை பயன்படுத்த பயனர்கள் வட்ஸ்அப்-இல் +91 7065415858 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் (SMS) அனுப்பினாலே போதும்.
அதி நவீன பொறியியல் தீர்வுகளை கொண்டுள்ள 6Eskai உங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு, விமான டிக்கெட் முன்பதிவு தொடர்பான உரையாடல்களை மகிழ்ச்சிகரமான ஒன்றாக மாற்றும்.
டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி 6Eskai உங்களுக்கான சலுகைகளை பெற உதவுவது, விரும்பிய இருக்கையை தேர்வு செய்வது, பயணத்தை திட்டமிடுவது என ஏராளமான சேவைகளை வழங்குகிறது.
இதோடு, 6Eskai உங்களது பயண முகவருடன் பேசவும் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post