புனித ஹஜ் கடமைக்காக சென்ற இரண்டு மில்லியனுக்கும் அதிமான ஹஜ்ஜாஜிகள் இன்று அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடுவதே ஹஜ் கடமையின் முக்கியமான அம்சமாகும்.
புனித ஹஜ் கடமைக்காக சென்றுள்ள ஹஜ்ஜாஜிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடும் விசேட நாள் இன்றாகும்.
உலகின் நாலா பகுதிகளில் இருந்தும் இரண்டு மில்லியகுக்கு அதிகமான ஹஜ்ஜாஜிகள் இம்முறை புனித ஹஜ் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில் இறுதிக் கடமையாகவே ஹஜ் கடமை திகழ்கின்றது.
பொருளாதார ரீதியாக வசதி படைத்த ஒருவர் தேக ஆரோக்கியத்துடன் இருந்தால், அவர் கட்டாயமாக புனித கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.
அரஃபா மைதானத்தில் இன்று கூடிய ஹஜ்ஜாஜிகள் விசெட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
ஹஜ் கடமைக்காக மாக்கா சென்று நோய்வாய்ப்பட்ட ஹாஜிகள் சவுதி அரசாங்கத்தினால் ஹெலிகொப்டர்கள் மூலம் அரஃபா மைதானத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இன்று அரஃபா மைதானத்தில் இருந்து முஸ்தலிபாவிற்குச் செல்லும் ஹாஜிகள் அங்கு தரிப்பர்.
அதன் பின்னர் மினாவிற்கு சென்று ஜமராத்களுக்கு கல் எறிவர்.
இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாகவே இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் இறுதிக்கடமையாக ‘ஹஜ்’ கடமையாக்கப்பட்டுள்ளது.
Discussion about this post