இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுகிறார்கள். இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் டிக்கெட் விற்பனையும் படுஜோராக அதிகரித்து ஒரு டிக்கெட் விலை 1,000 டாலரில் இருந்து 4,000 டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83,000-ரூ.3.34 லட்சம்) அதிகரித்துள்ளதாக ஆங்கில நாளேடுகள் தெரிவிக்கின்றன.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தின் மூலம் வருமானத்தை பன்மடங்கு உயர்த்தி கொள்ளும் ஐ.சி.சி இந்த முறை ஆடுகளத்தில் கோட்டை விட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
நியூயார்க்கில் இன்று நடக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏ பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டத்தில் ஆடுகளத்தை எந்த அணி எவ்வாறு பயன்படுத்தப்போவது என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post