ஜனநாயகத் திருவிழா எனப்படும் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(04) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தற்போது வரை பாஜக கூட்டணி முன்னிலையிலும் காங்கிரஸ் கூட்டணி இரண்டாம் இடத்திலும் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமிழ்நாட்டில் தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கெடுப்பில் தி.மு.க அணி முன்னிலை வகிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது.
543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மாத்திரம் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
அதற்கமைய, ஏனைய 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.
Discussion about this post