மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் 111 வேட்பாளர்கள் அடங்கிய 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இன்று பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால் அரியானா குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் பட்டியல்
பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடவுள்ளதுடன், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்க்கவுள்ளார்.
ஒடிசா சம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் போட்டியிடுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
My beloved Bharat and Bhartiya Janta’s own party, Bharatiya Janta party ( BJP) has always had my unconditional support, today the national leadership of BJP has announced me as their Loksabha candidate from my birth place Himachal Pradesh, Mandi (constituency) I abide by the high…
— Kangana Ranaut (@KanganaTeam) March 24, 2024
நிபந்தனையற்ற ஆதரவு
இந்த நிலையில், “என் அன்புக்குரிய பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதும் எனது நிபந்தனையற்ற ஆதரவு உண்டு” என கங்கனா தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “இன்று பாஜகவின் தேசியத் தலைமை எனது பிறந்த இடமான இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.
கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்ததை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
நான் ஒரு தகுதியான காரியகர்த்தாவாகவும் நம்பகமான மக்கள் சேவகியாகவும் செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post