இந்தியா கேரளாவில் தற்போது கோவிட் வைரஸின் புதிய திரிபான ஜே.என்.1 வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய வைரஸ் திரிபு மேல் சுவாசக் குழாயை பாதிக்கும் என்றும், காய்ச்சல், இருமல், சோர்வு, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, தலைவலி போன்றவை முக்கிய அறிகுறிகளாக தென்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய கோவிட் திரிபு வேகமாகப் பரவும் ஆபத்து உள்ளதாகவும், அதனால் அதுகுறித்து தொடர் கண்காணிப்பும் ஆய்வும் தேவை எனவும் குறிப்பிடப்படுகிறது.
தற்போது பரவும் ஜே.என்.1 வைரஸ் திரிபு, கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த வைரஸ் திரிபு தற்போது சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post