Jasper சூறாவளி தாக்கத்தால் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் இன்றும் அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. சுமார் 15 ஆயிரம் பேர் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.
சூறாவளி அபாயம் கடந்திருந்தாலும் அதிக மழைவீழ்ச்சி தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகின்றது.
Cairns, Port Douglas மற்றும் Daintree ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 800mm மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வெள்ளநீருடன் முதலை, நச்சு பாம்புகள் என்பன உலாவக்கூடும் என்பதால் மக்கள் விழிப்பாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.
Discussion about this post