உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரத்தில் பிணவறை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
இந்தியா-தமிழ்நாடு சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவற்றின் மனைவி சௌமியா என்பவருக்கு கடந்த 5ம் திகதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் மிக்ஜாம் புயலால் தேங்கிய மழைநீரில் ஆம்புலன்ஸ் வராமலும், உரிய மருத்துவ உதவி கிடைக்காமலும் இருந்துள்ளது.
இதனால் குறித்த பெண்ணிற்கு, பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் கிடைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த குழந்தையின் உடலை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையின் உடலை திரும்பப் பெற குழந்தையின் பெற்றோர் முயன்றுள்ளார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையின் உடலில் உரிய முறையில் துணி சுற்றாமல் அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கியதாகவும், ரூ.2,500 லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து பலரும் இந்த சமத்துவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரத்தில் பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சமத்துவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post