Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சிங்கள பெண்ணை காதலிக்கும் தமிழ் எம்.பி” தக்க பதிலடி கொடுத்த சாணக்கியன்

December 9, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சிங்கள பெண்ணை காதலிக்கும் தமிழ் எம்.பி” தக்க பதிலடி கொடுத்த சாணக்கியன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

என்னை நோக்கி விமர்சிக்கும் முட்டாள்களுக்கு நான் ஒருபோதும் பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்யவுள்ள இரா.சாணக்கியன், நாடாளுமன்றத்தில் போலியாக புலிச்சாயம் போர்த்திக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, சாணக்கியன் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த விமார்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று (08.12.2023) நாடாளுமன்றில்
இவ்வாறு தெரிவித்தார்.

என்னை நோக்கி நேற்றைய தினம் ஆளும் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தகாத வார்த்தைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த கேள்விகளை என்னிடம் கேட்பதற்கு முன்னர் அதிபரிடம் சென்று அவ்வாறான கேள்விகளை கேளுங்கள். ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கூறிய சில விடயங்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

நான் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்த விடயம் அனைவரும் அறிந்ததே. இவர் ஒரு விஞ்ஞானி போல் இங்கு
கருத்து தெரிவிக்கின்றார். நான் கல்வி கற்றது சிங்கள பாடசாலை என தவறான கருத்துக்களை கூறியிருந்தார்.

கண்டி திருத்துவ பாடசாலை மூவின மக்களும் கல்வி கற்கும் பாடசாலை. எனக்கு சிங்கள நண்பர்கள் இருக்கின்றனர்
என கூறி இருந்தார்.

எனக்கு அனைத்து மொழிகளை பேசும் நண்பர்கள் இருக்கின்றனர். இதை குறையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறான நபர்களின் கதைகளுக்கு நான் பதில் கூறாமல் சென்றாலும், மக்கள் இதற்கான பதிலை எதிர்ப்பார்பதால்
இங்கு இதனை முன்வைக்கின்றேன்.

இவ்வாறான நபர்கள் கூறும் விடயங்களை சில தமிழ் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன. இவ்வாறான போலி விமர்சனங்களே என் வளர்ச்சிக்கு பிரதான காரணம்.

ஊடக அமைச்சு குறித்து கலந்துரையாடும் போது முக்கியமான விடயத்தை இங்கு கூறவேண்டும். இன்றும் வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர்.

அரச ஊடகங்களில் கூட வடக்கு – கிழக்கில் தமிழ் மொழி செய்தி சேகரிப்பாளருக்கு ஒரு தொகையும், சிங்கள
மொழியில் செய்தி சேகரிப்பாளர்களுக்கு ஒரு தொகையினும் வழங்கப்படுகிறது.

Tags: #Colombo#Parliament#sanakiyan#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

தாலிகட்டும்போது தடுத்தி நிறுத்திய மணப்பெண்; காரணத்தால் க்ஷாக் ஆன உறவினர்கள்!

Next Post

இதயம், மூளை வலிமை பெற…. இந்த ஒரு பழம் போதும்..!

Next Post
இதயம், மூளை வலிமை பெற…. இந்த ஒரு பழம் போதும்..!

இதயம், மூளை வலிமை பெற.... இந்த ஒரு பழம் போதும்..!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.