கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு தாழிறங்கிய சம்பவம் அப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் (21-11-2023) குறித்த கிணறு முற்றாக
தாழிறங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று
முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிராம அலுவளர் நேரில் சென்று தொடப்பாக பார்வையிட்டுள்ளார்.
மேலும், கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் கிணறில் முழ்கியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சுத்தமான குடிநீரை பெறக்கூடிய வகையில் அயலவர்கள் பலரும் பயன்படுத்தி வந்த நிலையில் குறித்த கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அடுத்து வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியில்
உறைந்துள்ளார்.
கிணற்றின் சூழ உள்ள பகுதி பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதுடன் இது தொடர்பாக அதிகாரிகள் தமக்கேதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post