ஆஸ்திரேலியாவில் நிர்க்கதி நிலையிலுள்ள அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தர விசா வழங்கக்கோரி, 22 பெண் புகலிடக்கோரிக்கையாளர்கள் மெல்பனிலிருந்து கன்பரா நோக்கிய நடைபயணத்தை மேற்கொண்டனர்.
இலங்கையைச் சேர்ந்த சிலர் உட்பட இருபத்தி இரண்டு பெண்கள், அவுஸ்திரேலியாவில் நிர்க்கதியாக வாழும்
அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தரப் பாதுகாப்பு விசாக்களை வழங்குமாறு அவுஸ்திரேலியா
அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் நடைபயணத்தை ஆரம்பித்திருந்தனர்
நிரந்தர விசாவுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் நியாயமான பதிலை வழங்கவேண்டும் என கோரி நடைபயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்களது பயணம் இன்றைய தினம் கன்பராவில் நிறைவு கட்டத்தை எட்டியது.
Discussion about this post