இந்தியா- தமிழகம் தேனியில் 24 ஆண்டுகளாக அரசு பணியில் பணியாற்றிய போலி ஆசிரியையின் ஏமாற்று வேலை அம்பலமாகியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனுார் அருகே ராஜேந்திரா நகரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப
பாடசாலைஉள்ளது.
இங்கு தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த விஜயபானு என்பவர் கடந்த 1999 -ம்
ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இவர், சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கிறார்.
இந்நிலையில், தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு மர்மநபர் ஒருவர் போன் மூலம் தொடர்பு கொண்டு, விஜயபானுவின்
சான்றிதழ் பொய்யானது என்றும், மோசடி செய்து பணியில் சேர்ந்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஆசிரியை விஜயபானுவின் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். அப்போது தான் அவர் கொடுத்த 12 -ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என்று தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆசிரியை விஜயபானு மீது தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அதிகாரி முறைப்பாடு அளித்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் அவர், போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக விஜயபானு அரசு பணியில் பணியாற்றி வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஆசிரியை விஜயபானு மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post