அவுஸ்திரேலியாவின் வடக்கு மாகாண முதலமைச்சரான பைல்ஸ் (45) தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஒரு கடைக்கு அருகில் நின்றிருந்த முதலமைச்சரை நோக்கி வங்கியிலிருந்து வந்த பெண்ணொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்திய பெண் கைது
சம்பவம் தொடர்பில் தாக்குததல் நடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் வடமாகாண முதலமைச்சருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடன் உடன்படாதவர்களுடன் மரியாதையான விவாதத்தை வரவேற்பதாக தெரிவித்த முதலமைச்சர், ஆனால் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டா
Discussion about this post