கிளிநொச்சி நபர் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து 5 செக்கன் வந்த காணொளியால் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காணொளியில் பெண் ஒருவர் நிர்வாணநிலையில் நின்றதாகவும் அதன் பின்னர் கிளிநொச்சி நபர் தகாத உறவில் இருப்பதுபோல காணொளி அனுப்பியதுடன் அவரது நண்பர்களுக்கும் அக்காணொளியை அனுப்பியதுடன், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
AI தொழில்நுட்பம் என்பது தற்போது மக்களிடையே வெகு பிரபலமாகியுள்ளது. இந்த AI தொழில் நுட்பமானது, மனித இனத்தின் வளர்ச்சி என மகிழ்ச்சியடைந்தாலும் மற்றுமொரு பக்கத்தில் மோசடியாளர்களால் இதில் உள்ள ஆபத்துக்களையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அந்த AI தொழில்நுட்பத்தால் ஒருவரின் புகைப்படத்தை மாற்றி என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். நல்லதை மட்டுமே எண்ணி செய்பவர்களை பற்றி பிரச்சனை இல்லை
ஆனால் சிலமோசடியாளர்கள் இதனை தவறாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிடிவோர் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post