இலங்கை தமிழா்களுக்காக வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை நாளை (17) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் முதல் கட்டமாக 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் மேல்மொணவூா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் தொடங்கி வைத்தாா்.
இந்த முகாமில் மட்டும் ரூ. 11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்
அதன்படி, தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சா் செஞ்சி மஸ்தான் மேல்மொணவூரில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை நேற்றையதினம் ஆய்வு செய்தாா்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களுக்கு முதல் கட்டமாக ரூ. 176 கோடி மதிப்பீட்டில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வேலூா் மாவட்டத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதுவரை 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் 1,800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. என்றார்.
Discussion about this post