கனடா- ஒன்றாரியோ மாகாண வீடமைப்பு அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பதவி விலகல் தொடர்பில் கிளார்க் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளார்.
வீடமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தமது நோக்கமாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தமது பிரசன்னம் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும் என்பதனை உணர்ந்து கொண்டதனால் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவியை துறந்தாலும், ஒன்றாரியோ முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதிநிதியாக தொடர்ந்தும் அங்கம் வகிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பசுமை வலய வீடமைப்பு திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Discussion about this post