இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்திய உணவுப் பொருட்களின் விலை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் இவ்வாறான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதன்படி பருப்பு விலை 20 வீதத்தினாலும் வெங்காயத்தின் விலை 40 வீதத்தினாலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கும் திடீரென கோதுமை மாவு ஏற்றுமதிக்ககும் இந்தியா தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த பத்தாண்டுகளாக உலக சந்தையில் 40 சதவீத அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
சர்க்கரை மற்றும் வெங்காயம் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது இடத்தில் இந்தியா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலக விவசாய வர்த்தகத்தில் முதன்மையான நாடுகளில் ஒன்றான இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு உலக உணவுச் சங்கிலியையும் பாதிக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன
Discussion about this post