இத்தாலி, சர்டினியா தீவு உலகின் மிக அதிகமான ஆயுட்காலம் கொண்ட ஆண்கள் வாழும் நகரமாக பார்க்கப்படுகிறது. இங்கு உள்ள ஆண்கள் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக,
தங்கள் குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியான நேரத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் விலங்குகளுடன் நேரத்தை செலவிடுகிறார்கள், மலைகளில் நடந்து செல்கிறார்கள்,
நன்றாக உறங்குகிறார்கள் என வெளியான ஆவணத் தொடரான ‘லிவ் டு 100: சீக்ரெட்ஸ் ஆஃப் தி ப்ளூ சோன்ஸ்’-ல், காட்டப்பட்டுள்ளது. மேலும், தங்கள் பணிநாளை சரியான நேரத்தில் முடித்துக் கொள்கிறார்கள்.
ஒருவரோடு ஒருவர் நன்கு பழகுவார்கள், கனோனாவ் என்று அழைக்கப்படும் தங்கள் பகுதியின் மதுவை ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் பருகுகின்றனர். இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை.
நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அவர்களின் ரகசியம், இயற்கையான முறையில் மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவற்றின் விளைவாகவே ஆண்கள் 100 வயது வரை வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
Discussion about this post