கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விலை கட்டுப்பாட்டு பிரிவினரால் கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை, விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுகளில் வர்த்தகர்கள் செவ்வாய்க்கிழமை (22) கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் எஸ் சுபராஜினி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, காலாவதியான முகப்பூச்சு, கிரீம், பிஸ்கட், கேக் மற்றும் சோடா உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய ஏழு வர்த்தகர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய மற்றும் விற்பனை செய்த ஆறு வர்த்தகர்களுக்கு தலா ஐயாயிரம் வீதம் முப்பது ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post