ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் சென்று திரும்பும் வீரர்களை பூமியில் பத்திரமாகத் தரையிறக்குவதற்கான பரசூட் சோதனை வெற்றியடைந்துள்ளது.
இதையடுத்து, சோதனை ரொக்கெட்டிலும் இந்த பரசூட் பொருத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மோர்டார்ஸ் எனப்படும் பைரோ அடிப்படையிலான சாதனங்களுக்குள் டிரோக் பாராசூட்டுகள் இருக்கும்.
இதைத் திறப்பதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதும், 5.8 மீட்டர் விட்டம் கொண்ட பரசூட் காற்றில் பறந்து தரையிறங்கும் விண்கலத்தின் வேகத்தைத் தணிக்கும் என இஸ்ரோ கூறுகிறது.
2024 இறுதிக்குள் ககன்யான் திட்டம் செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 2019ஆம் ஆண்டு இந்திய வான்படையைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post