வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சமனல ஏரியில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விட தீர்மானித்த அதிபர் ரணிலுக்கும் அமைச்சரவைக்கும் நன்றி தெரிவிப்பதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விவசாயிகளுக்காக கட்சி,எதிர்ப்பு வேறுபாடுகள் இன்றி நின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
வறட்சி காரணமாக பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு நாமல் ராஜபக்ச அதிபர் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக விவசாயிகள் சார்பாக அதிபருடனான கோரிக்கைக்கு சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உடனடியாக பதிலளித்தமைக்கு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
வறட்சி தொடர்பில் சரியான மதிப்பீடு செய்து சேதத்தை குறைத்து சரியான முகாமைத்துவத்தை பேண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, இதற்கு தேவையான ஆதரவை வழங்க தானும் சிறி லங்கா பொதுஜன பெரமுனநாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post