இந்தியா அலுவலக ஊழியர்களிடமிருந்து அதிக உற்பத்தியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தில் தமது அவதானத்தை செலுத்தி வருகின்றது.
அதன்படி, செயற்கை நுண்ணறிவின் மூலம் அலுவக ஊழியர்களிடம் 75 வீதமான உற்பத்தியை பெற முடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது Salesforce (சேல்ஸ்ஃபோர்ஸ்) எனும் நிறுவனம் மூலம் தங்களது செயற்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தொழிநுட்பத்தை தற்போது பயன்படுத்தாத நிறுவனங்களை விடவும் 53 வீத அதிக உற்பத்தியை நிறுவனம் அடைந்துள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வேலை மேம்பாட்டிற்கு சுமார் 75 வீத இந்திய பணியாளர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
தற்போது, உலகளவில் சுமார் 77 வீதமான ஊழியர்கள் தங்கள் அறிக்கைகளைப் பெறுவதற்கும், செலவு அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும், பல்வேறு பணிகளைத் தானாகச் செய்வதற்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிலையில் அவர்களின் செயல்திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஊழியர்கள் பணிபுரியும் வேலை நேரம் குறையும், அதிக சம்பளம் சேமிக்கப்படும், ஊழியர்களுக்கு இலகுவான பணி ஒதுக்கீடு அட்டவணையும் அமைக்கப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post