கனடாவின் ஒன்றாரியோ மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரில் இந்த நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் காற்று கண்காணிக்கும் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த நகரின் வளியில் ரசாயன பதார்த்தங்கள் கலந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில் இந்த காற்றை சுவாசிக்கும் ஒவ்வொருவரும் நாளொன்றுக்க ஒரு சிகரட்டை புகைப்பதற்கு நிகரான ஆபத்தினை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
டொரன்டோ பல்கலைக்கழக பேராசிரியர் மெத்தியூ அடம்ஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பொருட்கள் முழுமையாக எரியாத போது வெளியாகும் ரசாயன பதார்த்தமான benzo (a)pyrene என்ற ரசாயன பதார்த்தம் ஹமில்டன் நகர வளியில் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காற்றின் தரம் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வகையிலானது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Discussion about this post