ஆசிரியர் இடமாற்றப் பிரிவிற்குப் பொறுப்பான தேசிய பாடசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஒருவர் இடமாற்றம் வழங்குவதற்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து இரண்டு ஆடுகளை இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இது தெரியவந்துள்ளது.
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் இந்த தகவலை அங்கு தெரிவித்தார்.
ஆசிரியர் ஒருவர் இடமாறுதல் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட பிரதிப் பணிப்பாளரை சந்திக்கச் சென்ற போது இரண்டு ஆடுகளை இலஞ்சமாக கோரியநிலையில் அவர் அதனை வழங்கிய நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்றங உறுப்பினர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு குறித்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சருக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
Discussion about this post