Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

சீனாவை விஞ்சும் இந்தியாவின் மக்கள் தொகை !

April 20, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
சீனாவை விஞ்சும் இந்தியாவின் மக்கள் தொகை !
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் 1,425.7 மில்லியனுக்கு எதிராக இந்தியாவின் மக்கள்தொகை 1,428.6 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமது அண்டை நாடான சீனாவை விட இந்தியா 2.9 மில்லியன் மக்களைக் கொண்டிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளினது சனத்தொகை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால், இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு கணிப்பாகும். மேலும், தங்கள் மதிப்பீட்டில் சீனாவின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹொங்கொங் மற்றும் மக்காவ் மற்றும் தாய்வானின் மக்கள் தொகை கணக்கிடப்படவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.
எனினும், தாய்வான் தனது சொந்த அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் சீன நிலப்பரப்பில் இருந்து வேறுபட்டதாகக் கருதுகிறது. கடந்த வருடம் நவம்பரில், உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியது.

எனினும், வளர்ச்சி முன்பு போல் வேகமாக இல்லை என்றும், 1950க்குப் பிறகு இப்போது மிகக் குறைந்த வேகத்தில் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் கருவுறுதல் விகிதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக ஐ. நா. தரவுகள் குறிப்பிடுகின்றன.

Tags: #ChinaPopulation#IndiaPopulation#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 20-04-2023

Next Post

பொன்னியின் செல்வனில் நடிக்க விக்ரம் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Next Post
பொன்னியின் செல்வனில் நடிக்க விக்ரம் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

பொன்னியின் செல்வனில் நடிக்க விக்ரம் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.