பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்லஸ் ஜேர்மனியின் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார்.
மன்னர் 3 ஆம் சார்லஸும் அவரின் மனைவியான ராணி கமீலாவும் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானிய மன்னராக 3 ஆம் சார்லஸ் மேற்கொண்டுள்ள முதலாவது இராஜாங்க விஜயம் இது என தெரியவந்துள்ளது.
இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸுக்கு விஜயம் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், 3 பிரான்ஸில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜேர்மனியின் சான்ஸ்லர் ஒலாவ் சோல்ஸ் மற்றும் ஜனாதிபதி பிராங்க் வோல்ட்டர் ஸ்டேய்ன் மேயர் ஆகியோரை மன்னர் 3 ஆம் சார்லஸ் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post