பெங்களூரு விமான நிலையத்தில் செருப்புக்குள் வைத்து தங்கம் கடத்த முயன்ற பயணியை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாங்கொக்கில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவரை வழக்கமான முறையில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது. அவருடைய செருப்பை ஸ்கான் செய்தபோது உள்ளே வித்தியாசமான பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து செருப்பை பிரிக்க உள்ளே நான்கு தங்க கட்டிகள் இருந்திருக்கின்றன. அதன் எடை 1.2 கிலோ எனவும் அதன் சந்தை மதிப்பு 69.40 இலட்ச ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள சுங்கத்துறை அதிகாரிகள்,
“பாங்கொக்கில் இருந்து பெங்களூரு வந்த பயணி ஒருவரை சோதித்தோம். அவருடைய செருப்பில் 4 தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
#WATCH | Gold weighing 1.2 kg worth Rs 69.40 lakh seized from a slipper of a passenger who arrived from Bangkok in Bengaluru by IndiGo flight: Customs pic.twitter.com/4dBwb5Dhpv
— ANI (@ANI) March 15, 2023
Discussion about this post