நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொழில் வாய்ப்புத் தேடி ஓமானுக்கு செறுள்ள இலங்கைப் பெண்கள், அங்கு தொழில் எதுவும் வழங்கப்படாது சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு தவறான தொழிலுக்கு வற்புறுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.
ஓமான் அழைத்துச் செல்லப்பட்டு நாடு திரும்பிய இரு பெண்கள் இந்த இத்வலை கூறியுள்ளனர்.
அங்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் சங்கிலிகளால் கால், கைகள் கட்டப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கைபெண்கள் விற்பனை வவுனியா ஆச்சிபுரத்தைச் சேர்ந்த 28 வயதான பெண்ணொருவர் கடந்த ஜூன் மாதம் டுபாயில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு எவ்வித தொழிலும் வழங்கப்படாத நிலையில் மூன்று மாதங்களின் பின்னர் நாடு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வவுனியா சிதம்பரபுரத்தைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவர் கடந்த செப்ரெம்பர் மாதம் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வேலை வழங்கப்படாத நிலையில் இரண்டு மாதங்களில் நாடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு நாடு திரும்பிய பெண்களே மேற்படி தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.
Discussion about this post