கனடாவில் வயோதிய பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய பெண் ஒருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
றொரன்டோவின் டவுன்போர்த் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
62 வயதான பெண் ஒருவர் நடைபாதை வழியாக நடந்து சென்ற போது எதிரில் வந்த பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதுடன், தாக்குதலை மேற்கொண்ட பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்தியவர் என்ற சந்தேகத்திற்கு இடமான பெண் குறித்த புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெற்றால் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
Discussion about this post