முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் வட்டுவாகல் கடல் நீரேரி கடலுக்குள் வெட்டி விடப்பட்டுள்ளது.
வட்டுவாகல் மற்றும் சாலை கடல் நீரேரிகள் மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ள நிலையில் பாலத்துக்கு மேலாக வெள்ளம் மேவிப் பாய்கின்றது.
மக்கள் போக்குவரத்துச் செய்வதில் இடர்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வட்டுவாகல் மற்றும் சாலைக் கடல் நீரேரிகளை வெட்டி விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு இது தொடர்பில் தீர்மானம் எடுத்து, நேற்று மாலை வட்டுவாகல் கடல் நீரேரியை வெட்டி விட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன், மேலதிக மாவட்டச் செயலர்களான க.கனகேஸ்வரன், எஸ்.குணபாலன், மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார், கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, படையினர், வட்டுவாகல் கடற்தொழிலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆலய வழிபாட்டுடன் கனரக இயந்திரம் கொண்டு வட்டுவாகல் கடல் முல்லைத்தீவு பெருங்கடலுடன் வெட்டிவிடப்பட்டது.
Discussion about this post