வீட்டில் உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட 9 மாத ஆண் குழந்தையின் இறப்புக்கான காரணம் உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்படாமையால் குருதி மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தும்பளை கிழக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த ரவீதன் சபரீசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தை அசைவற்று காணப்பட்டதையடுத்து உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழப்புத் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி திருமதி அஞ்சலா வின்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குருதி மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post