யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் இராணுவக் காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வீதியில் பயணிப்போர் இந்தச் சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
போதைப் பொருள் விற்பனை செய்வோர், போதைப் பொருள் பயன்படுத்துவோர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் தகவல் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post