லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 250 ரூபாவுக்கு இடைப்பட்ட தொகையால் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நுகர்வோருக்கு விநியோகிப்பதற்குப் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளது என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படவுள்ளது என்று வெளியான தகவலால் எரிவாயு விநியோகஸ்தர்கள் எரிவாயு சிலிண்டர் விற்பனையை மட்டுப்படுத்தியிருந்தனர்.
அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டருக்குக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
Discussion about this post