கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் செய்த இளைஞனை வழியனுப்ப கொழும்பு சென்ற புது மனைவி வீடு திரும்பாத நிலையில், அவர்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற வாகனச் சாரதியுடன் அவர் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் சொந்த இடமான கிளிநொச்சிக்கு வந்த இளைஞர், 24 வயதுடைய பெண் ஒருவரைத் திருணம் செய்தார்.
மணமகனின் பிரதேசத்தில் உள்ள ஹையெஸ் வாகனம் ஒன்றை அவர்கள் தங்கியிருந்த காலத்தில் அடிக்கடி வாடகைக்கு அமர்த்தியிருந்தனர்.
இவர்கள் நுவரெலியாவுக்கு தேனிலவும் சென்ற நிலையில், கடந்த வாரம் மணமகன் கனடா திரும்பியுள்ளார். அந்த ஹையெஸ் வாகனத்திலேயே உறவினர்களும், மணப்பெண்ணும் மணமகனை வழியனுப்ப கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்தனர்.
மணமகனை வழியனுப்பிவிட்டுத் திரும்பியபோது, சிலாபம் பகுதியில் இரவு உணவுக்காக வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தில் மணப்பெண் வாகனத்துடன் அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
மணப்பெண்ணும், வாகனச் சாரதியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் அவர்களைத் தேடியலைந்துள்ளது.
இந்தநிலையில், மணப்பெண் பேஸ்புக் ஊடாக மணமகனுக்கு தகவல் அனுப்பியுள்ளார். தான் புதுவாழ்வை ஆரம்பிக்கவுள்ளதாகவும், தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர் தகவல் அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post