வவுனியாவில் இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
வவுனியா, பூந்தோட்டத்தைச் சேர்ந்த தர்மரட்ணம் ரஜிதா என்ற 30 வயது பெண்ணே உயிரிழந்தவராவார். இரு பிள்ளைகளின் தாயான இவர், ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றுகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post