பருத்தித்துறை புலோலியில் நேற்று (27) பகல் வீடொன்றில் நுழைந்த திருடர்கள் தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பகல்வேளை வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் 33 பவுண் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பருத்தித்துறைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வீட்டில் இருந்தவர்கள் உத்தியோகத்துக்குச் சென்ற சமயமே திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குற்றம் நடந்த இடத்துக்கு பொலிஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
Discussion about this post