இளவாலை, சேந்தாங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) காலை கரையொதுங்கியது.
சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை அவதானித்த அந்தப் பகுதி மீனவர்களும், பொதுமக்களும் இது தொடர்பாக இளவாலைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இளவாலைப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். சடலத்தை இனங்காண முடியவில்லை என்று இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டு அவர் முன்னிலையில் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த ஆண்டு இறுதியிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் சடலங்கள் கரையொதுங்கியிருந்தன. அந்தச் சடலங்களும் இனங்காணப்படவில்லை.
Discussion about this post