இன்னும் சில தினங்களிா் எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய இலங்கையில் எரிபொருள் விலைகள் மாற்றப்படவுள்ளன.
எரிபொருள் விலை மாற்றத்தின்போது சில எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடிகின்றது.
வலு சக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் வழங்கிய தகவலின் படி டீசலின் விலை இந்தமுறை 10 ரூபாவால் அதிகரிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் இறுதி நேரத்தில் மாற்றப்படலாம் என்று தெரிவித்த அவர், நாட்டு மக்களின் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் விலை அதிகரிப்பு தொடர்பாக ஆழமான ஆலோசனையின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
Discussion about this post