யாழ்ப்பாணம் குடாநாட்டில் நேற்றுக் காலை முதல் கடும் மழை கொட்டித் தீர்த்ததால் தீபாவளிக் கொண்டாட்டங்கள் சோபையிழந்தன.
தீபாவளித் தினத்து புத்தாடை அணிந்து மக்கள் ஆலயங்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வது வழமையாகும். ஆனால் நேற்று யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்த்த பெருமழையால் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அதேவேளை, வடக்கில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் தீபாவளி வியாபாரம் களையிழந்து காணப்பட்டது. சிறுவியாபாரிகள் இதனால் பாதிப்புக்களை எதிர்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post