அளவெட்டி கிழக்கு கும்பிளாவளை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து உள்ளார்.
உயிரிழந்தவர் 30 வயதுடைய விஜயகுமார் சாந்தகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1:00 மணி அளவில் இடம் பெற்றுள்ளது என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை விழித்துக் கொண்ட உறவினர்கள் பார்த்த பொழுது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற பொழுதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் கூறினர்.
Discussion about this post