ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல்கைதிகள் 8 பேரை விடுவித்தமையை நாம் வரவேற்கின்றோம். அதேபோன்று ஏனைய அரசியல் கைதிகளையும் அவர் விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு மூலமாக தமிழ் அரசியல் கைதிகளான வரதராஜன், ரகுபதி சர்மா, சுதா, நவதீபன், ராகுலன், காந்தன், இலங்கேஷ்வரன், ஜெபநேசன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களை விடுவித்தமைக்காக ஜனாதிபதிக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். விடுதலையான அவர்களுக்கு வாழ்வாதார உதவியளிக்க தமிழ் உறவுகள் முன்வரவேண்டும்.
அதேபோன்று ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய ஜனாதிபதி முன்வரவேண்டும் என்றார்.
Discussion about this post