யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் வீதியில் பயணித்த ஹையேஸ் வாகனம் திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கேசன்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹையேஸ் வாகனம் திடீரெனத் தீப்பிடித்து சுவாலையுடன் எரிந்தது. சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து அகன்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதும், வாகனம் முற்றாகச் நாசமாகியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மின்கசிவே வாகனம் தீப்பற்றியமைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

Discussion about this post