உடைமையில் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கோப்பாய், செல்வபுரத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நண்பர்களிடம் இருந்தே போதைப் பொருளைப் பெற்றுக் கொண்டார் என்பதும், தனது கிராமத்தில் போதைப் பொருளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது என்றும் தெரிவித்துள்ளார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post