யாழ்ப்பாணம், நவாலியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் சிறுமியை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்து வந்தார் என்று கூறப்படுகின்றது. அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாயும், சந்தேகநபரும் திருமணம் செய்யாது ஒன்றாக வாழ்கின்றனர் என்று கூறப்படுகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சந்தேகநபர் 13 வயதுச் சிறுமியைத் தொடர்ச்சியாகத் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post