கிளிநொச்சி, கணேசபுரத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.
துவாரகன் கவின் என்ற 8 மாதக் குழந்தை கடந்த ஒரு வாரமாகக் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருந்துது.
கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் குழுந்தை சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்றுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.
Discussion about this post