வவுனியா, வேப்பங்குளத்தில் புதிதாக நிறுவப்பட்ட உயர் மின் அழுத்த மின் கம்பம் உடைந்து வீழ்ந்துள்ளது. அதில் ஏறிப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் தெய்வாதீனமாகத் தப்பியுள்ளார்.
வேப்பங்குளம், 7ஆம் ஒழுங்கையில் அதியுயர் மின் அழுத்த மின் கம்பங்களை நிறுவும் நடவடிக்கை மின்சார சபையால் முன்னெடுக்கப்படுகின்றது. மூன்று மின்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில் ஒன்று திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.
மின்கம்பத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் அருகில் உள்ள உயரமான கட்டடத்தின் மீது குதித்து பாதிப்பின்றித் தப்பிக் கொண்டுள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின் கம்பத்தில் சரியான முறையில் கம்பிகள் உள்ளீடு செய்யப்படாமையே இந்த அனர்த்தத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post