பளையில் நடந்த விபத்தில் 45 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 17 பேர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் வாகனம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் பிரிவினரின் வாகனம் என்பனவே விபத்துக்குள்ளாகியுள்ளன.
கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் வாகனம் மீது டிப்பர் மோதியதால் 45க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாகியாள்ளனர்.
காயமடைந்த அனைவரும் பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர்களில் 17 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 12 ஆண்களும், 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post