யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க
அமைச்சர் லோகான் ரத்வத்தேயின் மெய்ப்பாதுகாவலர்கள் வளர்ப்பு நாய் ஒன்றைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று உறுதியான தகவல் கிடைத்திருக்கும் நிலையில், இந்த விடயம் தொடர்பாகப் பொலிஸார் மௌனம் காக்கின்றனர்.
யாழ்ப்பாணம் வந்துள்ள அமைச்சர் வடமராட்சியில் உள்ள தனது குடும்ப நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றபோதே இந்தச் சம்பவம் நடந்திருக்கின்றது.
அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாய், புதிதாக வீட்டுக்குள் நுழைந்த அமைச்சரரைப் பார்த்துக் கடுமையாகக் குரைத்து அச்சுறுத்தியுள்ளது. அப்போது அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் நாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். நாய் அதில் இறந்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்ததும் அந்தப் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினர் அதிகரிக்கப்பட்டு, தகவல் பரவுவது மறைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் மௌனம் சாதித்தனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய உத்தியோகத்தர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
Discussion about this post