உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு வழங்கும்.
குறித்த யோசனை தொடர்பில் சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வரை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதியாக இருக்கும்போது உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சட்டவரைபு வந்தபோது, அதற்கு உடன்படவில்லை. எனினும் தற்போதாவது அந்த முடிவு தவறு என கருதி மாற்றம் மேற்கொள்ளப்படுவது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த எண்ணிக்கை குறைப்பு நகர்வு தேர்தலைப் பிற்போடும் தந்திரம் என டலஸ் ஆதரவு அணி குற்றஞ்சாட்டியுள்ளது.
Discussion about this post