இந்த வருடத்தின் மே மாத இறுதி முதல், நான்கு மாத காலப்பகுதிக்குள் தெற்கில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் மொத்தமாக 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்தக் காலப்பகுதியில் 29 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், இந்தச் சம்பவங்களின்போது மொத்தம் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 64 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்களைக் கைதுசெய்வதுடன் அவர்கள் வசமுள்ள ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post